தீ..


ஆதவனின் பாதியே

இந்த உலகின் ஆதவனும் நீயே

நீயே குளிர்ந்தாய்

இவ்வுலகம் கொடுத்தாய்

காற்றின் நண்பனே

நீரின் அடிமையே

நித்தமும் உன்னால்தான் இவ்வுலகம்.

ஏழைகளுக்காக

இரக்கம் கொண்டவனே

உன்னால்தான் பிழைக்கும் ஏழைகள் 

உனது உணவால்...

உத்தமிகள் சிலபேர் உன்னால்தான் 

தன் உத்தமத்தை நிரூபித்துக் கொள்கின்றனர் 

உன் பூக்குழியில் இறங்கி!

நீ என்ன நீதிமானா?

ஏ தீயே

மனங்கள் கலக்கும் திருமணங்கள்

உனது சாட்சியிலேயே நடக்கின்றன

ஆனால் சாட்சி சொன்ன சாயலிலேயே 

அவர்களை பிரிக்கவும் செய்கிறாய்?

புரியவில்லையா? 

எத்தனை திருமகளோ திருமகனோ 

மருமகனோ மருமகளோ 

உன்னால் மடிகின்றனர் 

ஏன் இந்த ஒவ்வாமை உன்னுள்?

நீயே?

கலங்கரை விளக்கமும் 

கல்லறைகளின் விளக்கும் நீயே?

ஒவ்வொரு மனிதனின் 

மறுஜென்மமும் ஆரம்பிக்க 

முந்தய ஜென்ம உடலை

உன்னால்தான் முடித்துக்கொள்கின்றான்.

இன்றைய உலகம் செய்திகளின் 

வேகப்பரவலை

உனக்குத்தான் எடுத்துக்காட்டை 

எழுதுகின்றனர்.

புரியவில்லையா உனக்கு

அதன் காட்டுதீ!

ஏன் உனக்குள் இவ்வளவு

கொடூரம்

உனக்கென்ன காடுகள் எதிரியா?

இல்லை உனக்குள் உயிரை விட

காடுகளுக்குதான் அவ்வளவு ஆவலா?

வேண்டாமட உனது முன்னறிவிப்பில்லா

இந்த எரிமலை தாக்குதல்

உன்னுள் உறையும்

உயிர்களின் எண்ணிக்கை போதாதா?

 வேதங்கள் உன்னுள்

ஓதப்படுகின்றன

பூதங்களில் ஒன்றான உன்னில் 

உன்னில் சிறப்புக்கள் பல இருக்க 

ஏன் குழந்தையை கொன்ற அவப்பெயர் 

புரியவில்லையா? இல்லை மறந்தாயா?

நீ ஆதிக்கம் செலுத்திய கும்பகோணத்தை.

குச்சியில் பிறந்தாய் அன்று 

குச்சிலை அழித்தாய் அன்று 

உன்னை அணைத்த பலபேர் 

அன்றிரவே அவர்களே அழைத்தனர் 

உன்னை அடுபெரிக்க,

ஏன் இந்த முரண்பாடு 

உன்னிலும் இந்த உலகிலும் ?

நிலவெளியில் பனி இரவில் 

சுகங்கள் உன்னால்...



இறுதியாக 

இழவு வீட்டிலும் 

ஒற்றனாய் உனதுருவம் 

அடங்கிய மனிதனின் 

அடக்கத்திற்கு பின்னால்...

No comments:

Post a Comment