வெறிச்சோடிய இருக்கைகள் பறந்தோடிய பறவைகளால்...

நாங்கள் அடைந்த இன்பங்களை
எங்களுடன் பகிர்ந்துகொண்டாய்....

உனக்கென்று ஒரு நிரந்தர இடமில்லை
நாங்கள் விரும்பிய இடத்தில் உன்னை மாற்றிகொண்டோம்..

உனக்கு எதற்கு விருப்பமில்லை
முதல் வரிசையில் எங்களை சேர்த்துக்கொள்ள

உனக்கும் எங்களுக்கும் 3 வருடங்கள்தான் உறவு
ஆனால் எங்களுக்குள் இரத்தமில்லாத சொந்த
உறவுகளை ஏற்படுத்தினாய்...

எங்களுக்கு மட்டும் மதிய உணவு  முதல் peroid
ஆரம்பத்திலே ஆரம்பமாகிவிடும்
கொட்டி கிடக்கும் சோற்று பருக்கைகள்
கெட்டி கிடக்கும் இந்த உறவுகளால் உன்மேல்...

கட்டில் தூக்கத்தை விட
உன் மடி சாய்ந்து தூங்கியதே அதிகம்...

உனது சோகங்கள் எங்களின்
பிரிவுகளால்.....