கவிதையில் அவள்


அவளை பற்றி ஆயிரம் 
கவிதைகள் எழுதினேன் 
கவியில் மட்டும் தான் 
இருந்தால் என்னோடு 
நினைவில்  மட்டும்  தான் 
வாழ்ந்தாள் என்னோடு 

கார்த்திகை தீபத்தில் அவள்
நேற்று இரவு 
எந்தன் வீடு முழுவதும் 
உந்தன் முகம் 
எந்தன் கண்கள் முழுவதும் 
உனது பிம்பங்கள் 
ஆனால்
நீ இல்லாமல் 
உனது முகம் மட்டும் எப்படி ?
ஆம்!
இன்று திருக்கார்த்திகை 
என்பதையே மறந்தேன்.