காதலித்த கணங்கள்
பேதமில்லா வகுப்பில்
பேதையால் பித்துபிடித்து கிடக்கும் மனம்,

சலனமற்ற நீரோடை
விடாமலடிக்கும் அவளின் ஆடிக்காற்றில் ஆடிப்போனதருணம்,

ஆசிரியரின் பாடமெல்லாம்
உளறல் சத்தமென்று ஒப்புகொட்டிய காது,

ஒரே ஒரு முத்தை சிக்கனமாய் ஒலித்த கால்கொலுசுக்கு
ஊதாரித்தனத்தை விலைகொடுத்த  மனம்,

பூமியின் இருட்டெல்லாம் ஆறாய் பெருக்கெடுத்த
அவளின் நீண்ட தலைமுடிக்குள்
உறங்கிப்போன என் மூச்சு,

பள்ளியில் திருடிய பாதரசத்தை நினைவுகொட்டிய
அவள் முகத்திற்கு ஒட்டாத சில பருக்கள்,

அச்சம்தான் அச்சம்தான் என்று பயப்பட்டு பயப்பட்டு
தொட்டுக்கொண்ட மேல்கீழ் இமைகள்,

செங்காந்தளின் இதழ் ஒன்று தலைகவிழ்ந்தும்
தலைநிமிர்ந்த இன்னொரு இதழுடன்
குரல் காற்றில் ஆடாமல் ஆடியது,

கடந்த சில நாட்களாக நிலவுக்கு
நெருக்கத்தில் இருக்கும் இரு விண்மீன்கள்தான்
அவளின் இதழருகின் மருவிற்கு பதில் சொல்லவேண்டும் ,

காற்றிடம் தோற்றுப்போன மேகம் போல
கருவிழியிடம் தோற்று
அங்கும் இங்கும் ஒதுங்கும் வெண்விழிகள்,

 எல்லாத்தையும் விட
நெஞ்சத்தில் முத்திரை பதித்த
சித்திரையை  பங்குபோட்டுக்கொண்ட அவளின் பெயர் ,

இந்த யோசனையின் மத்தியில் தான்
என்னை பிரிந்து பிரித்து சென்றாள்...

1 comment:

 1. // பள்ளியில் திருடிய பாதரசத்தை நினைவுகொட்டிய
  அவள் முகத்திற்கு ஒட்டாத சில பருக்கள், //

  // காற்றிடம் தோற்றுப்போன மேகம் போல
  கருவிழியிடம் தோற்று
  அங்கும் இங்கும் ஒதுங்கும் வெண்விழிகள், //


  இந்த ரெண்டு லைனும் சூப்பர் டா. உண்மைய சொல்லு உன்னைப் பிரிந்து பிரித்து சென்ற பெண் யார்

  ReplyDelete