பார்வையில்லா ஓவியன்...



நிறங்களின் பெயர்களை கேட்ட செவிகள்
அவற்றை கண்களுக்கு கூற மறந்தன..

இவன் கண்டதெல்லாம் ஒரேநிறம் 
அது 
கருப்போ சிவப்போ 
பச்சையோ வெள்ளையோ 
கடைசிவரை கண்களுக்கு புலப்பட்ட 
அந்த நிறம் அவனால் 
மற்றவர்பால் புரிதலுக்கு உட்செலுத்த...
உருவகப்படுத்திய ஒன்று உவமைக்கு ஒட்டவில்லை..

கண்கள் மனதிற்கு உருவங்களை காட்டவில்லை
ஆனால் இதயம் காட்டிய உருவங்களை 
கைகள் சுமந்த தூரிகைகள் சுவற்றில் காட்டியது..

பாவம்தான் அந்த சித்திரமும் 
அதுவாலும் அவன் கண்களைபோல நிறத்தை 
பிரித்தறிய இயலவில்லை 
இருநிறங்களை தவிர..

நீட்டல் அளவைகளை 
உணர்வு நரம்புகள் அளந்தன..

ஓவியத்தின் விடுபட்ட பாகங்களை 
சிறுமூளை மட்டுமே எச்சரித்தது
அதுவும் வீசிப்போன காற்றுபோல..

மனதின் விடைகள் மட்டுமே 
ஓவியத்தின் உடைகளாயின..

முடிவினை முழுமை அறிவிக்கவில்லை
ஞாபகங்களே முக்தியை அறிவித்தன..

யாழினை வென்ற மழலைபோல் 
காட்சியை வென்ற "கண்கள் சாட்சி சொல்லாத " ஓவியம்...