எஸ்.எம்.எஸ் விடு தூது

நான் வாங்கியதுமுதல் ஓசையின்றி 
உறங்கிய எனது மொபைல் 
விழித்துக்கொண்டது - அவள் 
என்னிடம் நம்பர் வாங்கியது முதல் 
இன்னமும் உறங்கவில்லை 
அவள் குறுஞ்செய்தி ஒலியை
கேட்டு கேட்டு ...

எனது சூரியோதயமெல்லாம் Hi  da  விலும்
அவளின் சூரிய அஸ்தமனம் Bye di இலும் தான்;

முன்பெல்லாம் Hi சொல்ல தயங்கியவள் 
இப்போதெல்லாம் Bye சொல்லவும் தயங்குகிறாள்;

நாள் முழுவதும் எழுத்துக்களின் மூலமே 
உயிரும்,உணர்ச்சியும் பருகிகொண்டோம்;

எங்களுடைய வாய்த்தகராறு எல்லாமே 
விரல் தகராறுகளில் தான்;

பதிலுக்காக காத்துநிற்கும் நிமிட முட்கள் 
" போதைப்பொருள் அடிமையின் 
நிறைவுறா ஆசையில் நடுங்கும் கை கால்கள் போன்றது";

பரீட்சையில் கூட
அவ்வளவு கதை எழுதியதில்லை 
ஆனால் 
எந்த விஷயமுமில்லை விவரமுமில்லை 
பகல் இரவு முழுவதும்
கதை கதையை எழுதிக்கொள்கிறோம்;

இங்கு
அவளுக்காக அவளுக்கும் சேர்த்து 
நான் உண்ணும் உணவு,
அங்கு  
எனக்காக எனக்கும் சேர்த்து 
அவள் பருகும் பானம் 
பதார்த்தங்களின் பரிமாற்றமெல்லாம் 
ஆடைகளையப்பட்ட ஆங்கில 
எழுத்துக்களின் கலவையில்;

அவளை செல்லமாக திட்டும்போது 
அவள் செல்லமாக திட்டும்போதும் 
வெட்கப்பட்டு சிரிக்கும் இருவரின் 
முகங்களை பார்த்து "போடா போடி"
என்று திட்டிக்கொள்ளும் வீட்டுக்கண்ணாடி ;

திட்டிய பிறகு திட்டலாமா? உரிமை உண்டா?
என்று கேட்டுக்கொள்ளும் உதடுகள்;

எனது 
SentBox எல்லாம் கெஞ்சல்களின் தொகுப்பாகவும்,
Inbox எல்லாம் கொஞ்சல்களின் தொகுப்பாகவும் 
நிரப்பபட்டிருக்கும் ;

எங்களின் முதல் எதிரி 
அனுப்புவதின் அளவை அரை இருநூறாக குறைத்த
'TRAI '
அடுத்த எதிரி 
ஆசை எஸ்.எம்.எஸ் களின் நடுவே 
பழைய Forward எஸ்.எம்.எஸ் களை தூசித்தட்டி அனுப்பும் 
'நண்பர்கள் '..

4 comments:

 1. //பதிலுக்காக காத்துநிற்கும் நிமிட முட்கள்
  " போதைப்பொருள் அடிமையின்
  நிறைவுறா ஆசையில் நடுங்கும் கை கால்கள் போன்றது";// this line s really superb da....

  nice poet...really lovable....

  ne ean intha cinimakku la pattu eluthak koodathu..

  ReplyDelete
 2. Congrats!!! great work.. analum ini jenmathukum unaku forward messages anupa mataen..

  ReplyDelete
 3. SentBox எல்லாம் கெஞ்சல்களின் தொகுப்பாகவும்,
  Inbox எல்லாம் கொஞ்சல்களின் தொகுப்பாகவும் .. expecting lines in my mobile too.. LOL

  ReplyDelete
 4. எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்


  மீண்டு(ம்) வந்தேன்

  ReplyDelete