யார் அவள்?
என் காதல் என்ற கன்னித்தன்மைக்கு
தாய்மை அந்தஸ்து தந்தவள்!
என் வெள்ளை காகித மனதில்
வண்ணம் தீட்டியவள்!
யார் அவள்?
என் செவிட்டுக்காதில் செவிமடல் கிழிய
யாழிசைத்தவள்!
குருட்டுப்பார்வை கூசுமளவிற்கு
தூரிகை விதைத்தவள்!
யார் அவள்?
என் ஆழ்கடலில்
அலை விரித்தவள்!
என் இருண்ட இரவில்
வெள்ளந்தியாய் வந்தவள்!
யார் அவள்?
என் இருண்ட முச்சந்தியில்
தெருவிளக்கேற்றியவள்!
என் திறந்த காகிதத்தில்
நிறைந்த கவியை வந்தவள்!
யார் அவள்?
என் கனவுகளுக்குள் ஆதம்,ஏவாளை
அனிமேஷன் படமாய் இயக்கியவள்!
என் புகைப்பட அட்டைக்கு பின்னே
சிட்டுக்குருவியாய் கூடு கட்டியவள்!
யார் அவள்?
என் கிழக்கு வானத்தில்
சிவந்த சின்னவள்
மேற்கு வானத்தில்
பழுத்த பாவை!
யார் அவள்?
என் நிசப்த மலைமுகட்டில்
ஆர்பரித்த அருவியாய் வந்தவள்!
எனது காய்ந்த தரிசியில்
வாய் பிளந்த ஊற்றாய் வந்தவள்!
யார் அவள்?
என்னுள் எப்போதும் வாழ்பவள்!
எங்கே? எங்கே?.....
--------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு தலை விருப்பம்
இது எனது முதுகலை கல்லூரி மாதிரி தேர்வின் போது நடந்த மனதிற்கினிய சம்பவத்தினை நினைவுகூரும் கவிதை.
இதோ...
முதல் அல்ல அன்று
அவளின் அருகில்
பருவ மனங்கள்
பருவ தேர்வில் சந்திக்கின்றன.
என்ன ஒரு அழகு!
அவளின் முகத்திலும், எந்தன் விடைத்தாளிலும்.
அவள் பேனா முனையா விடைதாளிலே,
என் கண்முனைகளோ அவளிலே.
என்ன ஒரு வேகம்!
அவளின் எழுத்து வேகத்திலும் ,
எந்தன் பார்வை வேகத்திலும்.
மூன்று மணி நேரம் ஏன் வைத்தார்கள்?
மிகவும் குறைவு
காதல் பாடம் எழுத
போதாத மணித்துளிகள்.
திரும்பவும் இல்லை அவள்
திருந்தாத மனதோடு,
ஒரே நேரம் பார்த்தாள்
என் பேனா அவளருகில் வீழும்போது....
அதற்கே தெரிந்திருக்கும் அப்போது
கதை கூட எழுததெரியாத மடயனாகிவிட்டானே என்று...
பரவாயில்லை போகட்டும்
இன்னும் நான்கு தேர்வுகள் உண்டு
பொழுது போகாத இரவுகளுடன்,
தவிக்கும் நினைவுகெடாத மனதோடு
அவளிடம் பேச...