உன்னோடு உரையாடல், என்னோடு உயிர்தேடல்

--இது ஒரு காதலர்களின் உரையாடல்-- 


கதைபேசி நாளாச்சி நீ எங்க போன ?
பூவோடு கைசேர்க்கும் நார் தேடப்போனேன்.
விதை வீசி பயிரான நிலம்போல நானும் 
எனை பேசி கயிறான நார் போல நீயும், நாளும் 
கணம்கோடி கைகோத்து விடியாம ஆனோம்...

நிழல் தேடி அடைகாத்த வெயில்போல நானும்
குடை கூட நனையாத மழையாக நீயும்
நதி ஓடி தானே கடல்சேர போனோம்,
சுதி பாடி வழிய இதமாக்கி போனோம்....

என்னோடு இல்லாத என் உசுருதான
நீயாக உருமாரி நீராகி போச்சி
நூறோடு நிக்காத என் ஆசை தான
ஆறோட கரையெங்கும் நுரையாகி போச்சி...

படகேறி பலபேரு பயணித்த போதும்
படகோட்டி கைரேகை துடுப்புக்குத் தெரியும்,
நதியோட நானூறு துளியுள்ள போதும்
நானெந்த தூளியின்னு உனக்குத்தான் தெரியும்....

கைகோத்து நிக்காத சிறகாக நாமும்
ஒளியோட நிக்காத நிழலாக போவோம்...

No comments:

Post a Comment