ஏங்கும் நான் ஏங்க வைக்கும் என் கிராமம்

எங்கே!

என் காதில் கூவி என்னை எழுப்பும்
சேவல் சத்தம்,

மாட்டு சாணியால் முத்தம் தெளிக்கும் சத்தம்,

அம்மாவின் கையால் அழகாகும் வாசல் முத்தம்,

விசிலடிக்கும் கானக்குயில்களின் சத்தம் ,

ரசிக்க வைக்கும் வெள்ளாட்டின் சத்தம் ,

பசுவை அழைக்கும் கன்றின் சத்தம் ,

சிறுவர்கள் துள்ளி குளித்து விளையாடும்
நிரம்பிய ஊரணி,

வயல்வெளிகள் ரசிக்கும் குளத்தங்கரை,

காற்றிலே ஒன்றுகொன்று காதினை
தொட்டுக்கொள்ளும் பனைமரங்கள்,

காற்றிலே காவியம் படைக்கும்
ஆங்கங்கே சற்று வளர்ந்து பூத்த

நெல் மணிகள்,

விடுமுறை என்றாலே எங்கள்
விளையாட்டிற்காக காத்துநிற்கும்
புளியந்தோப்பு,

உயிரையும் கொடுக்கும் உறவு கூட்டங்கள்,


மாடுகள் மேயும் புல்வெளி,

கழனி பாடும் ஆயில் மோட்டர்கள் ,

தண்ணீரே கலக்காத எருமை மாட்டுபால்,

ஊரையும் சொந்தங்களையும்
ஒன்றாக்கும் இரண்டாக்கும்
பஞ்சாயத்து தேர்தல்களும்
கோவில் திருவிழாக்களும்,

ஊர் எல்லையில் அய்யனார் கோவில்,

பொங்கலில் விளையாடும் வீர விளையாட்டுகள்.
திருக்கார்த்திகையில் அவிந்தும் அவியாத
பனை ஓலை கொழுக்கட்டை,

நெஞ்சினை உருகவைக்கும் குற்றால சாரல்,
ஏங்க வைக்கும் தாமிரபரணியும்,பாபநாசமும்,
ஆளை மயக்கும் இருட்டுக்கடை அல்வா,

பள்ளி செல்லும் அழுக்குச்சட்டை குழந்தைகள்,

கர்ஜிக்கும் காளைமாட்டு மணி சத்தம்,

கதை பேசும் கால்வாய் பாலங்கள்,

குளிக்கவரும் பெண்களை கிண்டல்பண்ணும்
வயல் வரப்புகள்,

மாட்டுவண்டியில் வித்தைகளும் ஆலமரத்து இராட்டினமும்,

அடுத்தவன் தோட்டத்து இளநீரும்,
அடுத்தவன் பனையின் நுங்கும்,

நீந்தியே கிணற்றின் ஆழம் அளக்கும் சிறுவர்கள்,

சொக்கவைக்கும் தெண்டுகொட்டாய்
மனதை கவரும் மலை அடிவாரம்,

அனைத்திற்கும் மேலாக
மூத்தவளின் முத்தம்,
என் வருகைக்காக எப்போதுமே
காத்திருக்கும் என் நண்பன்,


எல்லாம் எங்கே?

சென்னையில் போதும்  நரக வாழ்க்கை
போகிறேன் சொந்த ஊருக்கே
என் படிப்பு முடித்ததும்...