கவிதைகளின் ஒலிவடிவத்தில் குயில்களின் கானங்கள்
மடுவினை முட்டும் கன்று - அதன்
மகிழ்வின் வெளிப்பாட்டில் தாய்பசுவின் இசை
ஆற்றுப்படுகையின் ஒற்றையடிப்பாதை
பதம் பார்த்து நடக்கையில் பாதம் சிலிர்க்கவைக்கும்
புல் நனைத்த பனித்துளிகள்
தரைமுழுக்க பச்சைக்கம்பளிகள் அதில்
பாகம்பிரித்த வரப்புகள்
சற்று தூரம் நடந்தால் மேற்கினை சாய்த்த மலையடிவாரம்
ஊரினை வேடிக்கை பார்ப்பதோடு
மலைகளோடு காதலில் சிக்கி
மார்பணைத்துக்கொள்ளும் வெண்பஞ்சு மேகங்கள்
சாயங்கால நிலா
காற்றில் வெண் காகித உலா
இரவு வானில் சிதறிக்கிடக்கும் கோகினூர் வைரங்கள்
அகண்ட இருள் ஒற்றை ஒளி
ஒளியின் நடுவில் உருவம்
அதன் நீண்ட நிழல்...
இவைகளில்தான் நான் புதைந்தது...