பிரிவுகள்






நானும் இல்லை 

நீ இல்லை!நீ இல்லை என்று 
ஆயிரம் முறை சொல்கிறாய்..
ஒரு முறையாவது சொல்வாயா
" நீ இல்லை என்றால் 
நான் இல்லை என்று "


முதல் முத்தம் 

சத்தமின்றி நீ கொடுத்த 
முதல் முத்தம் 
நான்
சத்தமின்றி கொண்டாடிய தீபாவளி
வண்ண வண்ண விளக்குகளாய் 
என் மனதில் மிளிர்ந்தது
காதல் என்ற புத்தாடையுடன்...

நீயு(ரு)மாகி 

உன் ஞாபகம் என்னும் நீருற்று 
என்னில் ஓடவிட்டால் 
காட்டாறு என்னும் 
என் தேகம் காய்ந்துவிடும் 
நீ(யி)ரின்றி.

என் இரயில் பயணம் 

சிறு யணமும் நெடுந்தூரம்தான் 
என் நினைவில் நீ 
பயணிக்காத வரை,
அறுநூறு மைல் கல்லும் 
ஆறடிதான் 
என் நினைவில் 
நீ பயணிக்கும்போது.

காக்கும் காதலன் 

அன்பே!
கரையாககாத்து நிற்கிறேன் 
அலையாக நீ வருவாயென,
வெயிலில் வீழ்ந்து கிடக்கிறேன் 
நிழலாக நீ வருவாயென,
இன்னமும் மணக்காமல் காத்து நிற்கிறேன் 
மலராக வருவாயென... 
அன்பே!
நானும் கல்லைத்தான் இருந்தேன் 
உளியாக நீ வரும் வரை...

பிரியும் நாள் நீளும் ஜென்மம் 

உன்னை பிரியும் நாட்களில் 
வாழ்நாளில் ஒன்றை இழக்கிறேன்
உன்னை அடைந்த நாளில் 
ஜென்மங்களில் ஒன்றை மீட்கிறேன்.


காதல் மிதவை 

எனது நினைவலைகளில் மிதப்பது 
நீ மட்டுமல்ல 
என் வாழ்க்கையும்தான்.