அவளின் நினைவுகளாய்....


 
ஒரு விழியால் உளி சேர் 
உன்னை பார்த்தது உண்மைதான்;
மறுவிழி மறுப்பதுபோல் 
எனை மறைத்துக்கொண்டது பொய்.

நீ அறிந்த எனது பெயர் 
நான் மொழிந்து நீ வழிய ஆசைப்பட்டது உண்மைதான்;
ஆணவமிக்க என் வார்த்தைகளுக்குள் 
எனது பெயரை எனக்குள் மறைத்துக்கொண்டது பொய்.

மெய்யெழுத்தாய் எனை நீ  
தொடர்ந்தது உண்மைதான்;
உன் தொடர்தலின் தொடர்தலுக்கு முற்றுப்புள்ளியாய்
உனை முறைத்தது பொய்.

உனது ஆசை வார்த்தைகளுக்குள் 
நான் ஆழ்புதைந்தது உண்மைதான்;
அர்த்தமற்ற என் சந்தேகத்திற்குள் 
உனை ஆழ்புதைத்தது பொய்.

நீ உன் காதலுக்குள் என்
நட்பை மறந்தது உண்மைதான்;
நான் என் நட்புக்குள் உன்
காதலை கரைக்க நினைத்தது பொய்.

என் உறவுமுறைக்காக என்னிடம் 
நீ முறையிட்டது உண்மைதான்;
அந்த உறவு முறிக்க நான் 
உன் உறவையே முறிக்க நினைத்தது பொய்.

எப்போதாவது உன்னிடம் பேசிக்கொள்ள 
அப்போது பிரிந்தது உண்மைதான்;
எப்போதுமே உனை நினைக்ககூடாது 
என நினைத்துக்கொண்டிருப்பது பொய்...

No comments:

Post a Comment