பருவத்தில் காதல்...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பருவத்தில் காதல்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 பள்ளி விடை சொல்லிய காலம்
பதில்களை மட்டுமே பதியவைத்த
உதடுகள் மேல் 
புதிய பதம் உதயமாவது போல் 
கால் முளைத்த கருப்பு கம்பளி பூச்சிகள்.

மலரின் இதழ்களை தோய்த்து வைத்த
முக ஸ்பரிசங்களில் 
புல்லில் விழுந்த பனித்துளி போல் 
உதயமாக காத்துநிற்கும் பருக்கள் 
இவையெல்லாம் 
அவன் பருவம் தொட்டதை
குறிப்பால் உணர்த்தியவை...

முத்தக்காட்சியில் முகம் மறைத்த கரங்கள் 
கண்ணாடியில் மீசை திருகுவதை காட்ட 
அடிக்கடி முயல்கிறது இப்போதெல்லாம்

அளந்து பார்க்காமல் 
தலையினை பங்குபோட்ட நேர்கோடு 
கொஞ்சநாளாய் விளக்கெண்ணை வாசத்திற்கு 
விடைகொடுத்து புதிய கோர்வையில் 
நீர் வற்றிப்போன நெல் நாற்றுகளாய் 
உலர்ந்து காற்றில் களி நடனம் கண்டது..

கதிரவன் கண்ட காலை போல்
மனது மிளிர ஆரம்பிக்கும் பருவமது
தென்றல்தான் அதற்கு சரியான ஒப்புமை..
அந்த தென்றலை வாசம் பெறச்செய்வது
மணம் ததும்பிய காதல்..

இத்தனையும் ஒத்தவன் 
முதலாய் தன்னை வாசம் செய்யும் 
மலரிடை செல்கிறான்..

அதுதான் முதல் தருணம் 
அவன் காதல் பூக்க காரணமாகும் ..
மங்கை கொடியை காண்பது.
அப்போதெல்லாம்  அவள் 
வெளிச்சத்தில் எரிந்த மின்விளக்காய்
விலையற்று கிடந்தாள்..

அவள் - அவன் கண்ணில் பட பட 
வெளிச்சம் இருண்டு; விளக்கு மின்மினியாய் மாறி 
புதிய பருவம் 
புதுமைபெற  ஆரம்பமாகிறது...
                                              (தொடரும்...)